Welcome

TET and TRB exam on BT ...so Rathina Kumar calls on 15.02.12 at in front of TRB chennai./ /Employment clarification BT- BCM- History for sending TRB ......another source says 3*** BTs in old G.O ... selection list after PG , SGT and SPL teachers selection./ TRB says " Not release PG list" /1:5 list for spl Trs soon by TRB -Dinathanthi/

Thursday, February 17, 2011

SMS from Narasimman sir TGF



s.shiva said...
புதுக்கடை : தமிழக அரசு 1961 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பட்டியலை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட பின் மீண்டும் அதேப்பட்டியலை வெளியிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் சாதனை படைத்துள்ளது.உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் பொருளாதார ரீதியில் முன்னேற போராடி வருகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்காவே கதிகலங்கி போனது. ஆனால் இந்தியா தலை நிமிர்ந்து நின்றது. இப்படி இந்தியா பொருளாதார வளர்ச்சியில் தலைநிமிர்ந்து நின்றதற்கு கல்வி வளர்ச்சி காரணம்.இந்திய அரசு தற்போது கல்வித்தரத்தை வலுவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஒரு குழந்தையின் கல்வி வளம் நன்றாக அமைய வேண்டுமெனில் அடிப்படை கல்வி வலுவாக இருக்க வேண்டும். இதற்காக குழந்தைகளோடு நன்றாக ஒருங்கிணைந்து பாடம் நடத்துவதற்காக இடைநிலை ஆசிரியர் பயிற்சியை கொண்டுவந்தது.முதலில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சி முடித்து ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் வரை மாவட்ட பதிவுமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கோர்ட் வழிகாட்டுதல்படி மாநில பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடந்து வருகிறது. அதன்படி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் சுமார் 28 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் 2009ம் ஆண்டு ஜூலையில் 5473 பேரும், செப்டம்பரில் 1943 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பின் இடைநிலை ஆசிரியர் நியமனம் கேள்விக்குறியாகவே இருந்தது. பட்ஜெட்டில் போதிய நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டும், அடுத்த பட்ஜெட் வந்த பின்னும் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் நடக்காதது இடைநிலை ஆசிரியர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. 2010ம் ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறை அமைச்சர் 1743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என அறிவித்தார். இதை தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி தொடக்கக்கல்வி இயக்குனர் 1100 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்த பெரும்பாலானோர் அரசு சட்டசபையில் அறிவித்ததை நம்பி விசாவை ரத்து செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் அரசு மீண்டும் 1600 இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு டிசம்பருக்குள் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்புவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து 2010 டிசம்பர் 20ம் தேதி 1961 இடைநிலை ஆசிரியர்களுக்கு 1:5 என்ற விகிதாச்சார அடிப்படையில் பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அதன் பின் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் கடந்த 2010 டிசம்பரில் வெளியிட்ட அதே பதிவுமூப்பு பட்டியலை வெளியிடுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் அறிவித்தது. இது இடைநிலை ஆசிரியர்களை குழப்பமடைய செய்துள்ளது. இது குறித்து ஆசிரியர் நியமன பட்டியலில் இடம்பெற்று தற்போது மீண்டும் சான்றிதழ் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்ட ஒருவர் கூறியதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அடிக்கடி அவரவர் மாவட்ட சீனியாரிட்டி பட்டியலை வெளியிட்டும், மாநில இடைநிலை ஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட்டு பதிவுகளை சரிபார்க்க கூறியும் பணி நியமனம் செய்யாமல் ஏமாற்றுகிறது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுமார் 28 ஆயிரம் பேரில் சுமார் 7 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களில் இருந்து அரசு நினைத்திருந்தால் கடந்த ஜூலை மாதமே 1961 பேரை நியமனம் செய்திருக்கலாம். ஆனால் தற்போது அரசு மீண்டும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்காக 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என அறிவித்தது அதிர்ச்சியாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்
I.Abdul Kader said...
Thanks Shiva...... by abdul

2 comments:

  1. புதுக்கடை : தமிழக அரசு 1961 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பட்டியலை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட பின் மீண்டும் அதேப்பட்டியலை வெளியிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் சாதனை படைத்துள்ளது.உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் பொருளாதார ரீதியில் முன்னேற போராடி வருகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்காவே கதிகலங்கி போனது. ஆனால் இந்தியா தலை நிமிர்ந்து நின்றது. இப்படி இந்தியா பொருளாதார வளர்ச்சியில் தலைநிமிர்ந்து நின்றதற்கு கல்வி வளர்ச்சி காரணம்.இந்திய அரசு தற்போது கல்வித்தரத்தை வலுவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஒரு குழந்தையின் கல்வி வளம் நன்றாக அமைய வேண்டுமெனில் அடிப்படை கல்வி வலுவாக இருக்க வேண்டும். இதற்காக குழந்தைகளோடு நன்றாக ஒருங்கிணைந்து பாடம் நடத்துவதற்காக இடைநிலை ஆசிரியர் பயிற்சியை கொண்டுவந்தது.முதலில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சி முடித்து ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் வரை மாவட்ட பதிவுமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கோர்ட் வழிகாட்டுதல்படி மாநில பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடந்து வருகிறது. அதன்படி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் சுமார் 28 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் 2009ம் ஆண்டு ஜூலையில் 5473 பேரும், செப்டம்பரில் 1943 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பின் இடைநிலை ஆசிரியர் நியமனம் கேள்விக்குறியாகவே இருந்தது. பட்ஜெட்டில் போதிய நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டும், அடுத்த பட்ஜெட் வந்த பின்னும் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் நடக்காதது இடைநிலை ஆசிரியர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. 2010ம் ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறை அமைச்சர் 1743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என அறிவித்தார். இதை தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி தொடக்கக்கல்வி இயக்குனர் 1100 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்த பெரும்பாலானோர் அரசு சட்டசபையில் அறிவித்ததை நம்பி விசாவை ரத்து செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினர்.
    இந்நிலையில் அரசு மீண்டும் 1600 இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு டிசம்பருக்குள் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்புவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து 2010 டிசம்பர் 20ம் தேதி 1961 இடைநிலை ஆசிரியர்களுக்கு 1:5 என்ற விகிதாச்சார அடிப்படையில் பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அதன் பின் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் கடந்த 2010 டிசம்பரில் வெளியிட்ட அதே பதிவுமூப்பு பட்டியலை வெளியிடுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் அறிவித்தது. இது இடைநிலை ஆசிரியர்களை குழப்பமடைய செய்துள்ளது. இது குறித்து ஆசிரியர் நியமன பட்டியலில் இடம்பெற்று தற்போது மீண்டும் சான்றிதழ் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்ட ஒருவர் கூறியதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அடிக்கடி அவரவர் மாவட்ட சீனியாரிட்டி பட்டியலை வெளியிட்டும், மாநில இடைநிலை ஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட்டு பதிவுகளை சரிபார்க்க கூறியும் பணி நியமனம் செய்யாமல் ஏமாற்றுகிறது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுமார் 28 ஆயிரம் பேரில் சுமார் 7 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களில் இருந்து அரசு நினைத்திருந்தால் கடந்த ஜூலை மாதமே 1961 பேரை நியமனம் செய்திருக்கலாம். ஆனால் தற்போது அரசு மீண்டும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்காக 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என அறிவித்தது அதிர்ச்சியாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்

    ReplyDelete